ஒரே ராசியில் உள்ள ஆணும்பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்!!


Image result for ராசியில்ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும். திருமண பந்தம் என்று வரும் போது இரண்டு ராசிக்காரர்கள் இணையும் போது அவர்கள் வாழ்க்கையில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றது. திருமணமான ஆணும், பெண்ணும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

மேஷம்
உணர்ச்சி பூர்வமாகப் பேசி அறிவு பூர்வமாக முடிவெடுப்பவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இவர்கள் தான் செய்வதே சரி என்று நினைப்பவர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் தொடர் பிரச்னை, சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்
விடாமுயற்சியும், லட்சியத்தையும் நோக்கிப் பயணிப்பவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இந்த ராசியில் உள்ள ஆணும், பெண்ணும் இணையும் போது இவர்களின் எண்ணங்கள், கருத்துகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். வாழ்க்கையை ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் வாழ்வார்கள்.

மிதுனம்
மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் ஈர்ப்பு இருக்கும். ஆனால், இவர்களில் ஒருவர் ஈர்ப்புடன் இருந்தால், மற்றொருவர் சமநிலை இன்றி காணப்படுவார்.

கடகம்
யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத கடக ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் உணர்ச்சிப்பூர்வமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவர் மற்றொருவருடைய உணர்வைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வாழ்க்கை கரும்பாய் இனிக்கும்.

சிம்மம்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் மத்தியில் முதலில் நிற்பது முன்கோபமாக தான் இருக்கும். இதனால், ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிப்பது, பொறுமையுடன் வாழ்க்கை நடத்தினால் பிரச்னைகள் குறையும்.

கன்னி
காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள் கன்னி ராசிக்காரர்கள். இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஒருவருடைய மேன்மைக்கு மற்றொருவர் உறுதுணையாகத் திகழ்வார்கள்

துலாம்
வெற்றி நோக்குடன் செயலாற்றுபவர்கள் துலாம் ராசி அன்பர்கள். இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் தங்களுக்குள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொண்டால் இவர்களின் உறவில் பிரிவு உண்டாகாது.

விருச்சிகம்
சாதனைப் படைக்கும் மனம் கொண்டவர்கள் விருச்சிக ராசி அன்பர்கள். இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவர் மத்தியில் ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கும். ஆனால், இவர்களின் வாழ்வில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு
எடுத்த காரியத்தை திறமையுடன் முடிக்கும் தனுசு ராசிக்காரர்கள். இந்த ராசி ஆண் பெண் திருமண பந்தத்தில் இணையும் போது ஒற்றுமையாக காணப்படுவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விருப்புவார்கள். ஆரோக்கியமான விவாதம், உற்சாகத்துடன் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள்.

மகரம்
சுறுசுறுப்புடன் பணிகளை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள் மகர ராசிக்காரர்கள். இந்த ராசி ஆண், பெண் இணையும் போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வார்கள். இதனால் இவர்களின் உறவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.

மீனம்
தன்னலமற்ற மீன ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவேறு பார்வைகள் கொண்டவர்கள். தனித்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள்

No comments

Alisha Stylish Banarasi Silk

₹1600 Cash on Delivery Free Shipping