அஜித்திற்கு விஜய்யிடம் பிடித்தது இதுதானாம். அவரே கூறியுள்ளார்




தற்கால தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் அது தல-தளபதி மட்டுமே. இருவருக்கும் சினிமாவில் போட்டிகள் இருந்தாலும் நிஜத்தில் நல்ல நண்பர்கள் என்று தான் கூற வேண்டும். 
மங்காத்தா படத்தின் சூட்டிங்கின் போது தல’ய்க்கு தளபதி கிப்ட்டாக கொடுத்த ஒரு வாட்ச்சை இன்று வரை பயன்படுத்தி வருகிறார் தல.எப்படி இருந்தும் தல-தளபதி ரசிகர்கள் ஒரு பக்கம் எப்போதும் சண்டை போட்டுகொண்டு தான் இருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து வருகிறார் தல. 
அரசியல்வாதிகள் ஏற்படுத்திய சில கசப்பான அனுபவங்களால் ரசிகர் மன்றத்தை கலைத்தது மட்டுமில்லாமல், பேட்டிகள் கொடுப்பதையும் நிறுத்திவிட்டார் தல.
ஆனால், ஒரு காலத்தில் பொதுவாக அனைத்து டீவி சேனல்களுக்கும் கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேட்டி கொடுத்தார். 
அந்த சமயத்தில் ஒரு டீவியில் கொடுத்த பேட்டியில் தனக்கு பிடித்த தளபதி படம் ‘காதலுக்கு மரியாதை’ தான் எனவும் கூறியுள்ளார். இந்த படம் வந்த காலத்தில்தான் அஜித்தும் வாலி போன்ற தரமான படங்களை கொடுத்து வந்தார். அப்போது தான் இருவரும் தமிழ் சினிமாவின் அடுத்த ஜெனரேசன் நடிகர்களாக உருவம் பெற்றனர் எனப்தும் குறிப்பிடடகக்கது.

No comments

Alisha Stylish Banarasi Silk

₹1600 Cash on Delivery Free Shipping