ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்யக்கூடாதவை என்ன? செய்ய வேண்டியவை என்ன?
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பல வழிமுறைகளில் மிக எளிமையாக சரி செய்ய முடியும், குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிக தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஸ்மார்ட்போன் மாடல்கல் தண்ணீர் மற்றும் தூசி மூலமாக பாதிப்படையாத வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சகளுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மக்கள் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை சரிசெய்ய தேவையில்லாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனர், சில வழிமுறைகள் மூலம் எளிமையாக சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-1: தெரிந்தோ தெரியாமலோ உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.
வழிமுறை-3: அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது.
வழிமுறை-4: ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
Read more at: https://tamil.gizbot.com/how-to/how-repair-fix-wet-water-damaged-mobile-phone/articlecontent-pf127306-016488.html
Post a Comment