ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் செய்யக்கூடாதவை என்ன? செய்ய வேண்டியவை என்ன?
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பல வழிமுறைகளில் மிக எளிமையாக சரி செய்ய முடியும், குறிப்பாக இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிக தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஸ்மார்ட்போன் மாடல்கல் தண்ணீர் மற்றும் தூசி மூலமாக பாதிப்படையாத வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சகளுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மக்கள் தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை சரிசெய்ய தேவையில்லாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனர், சில வழிமுறைகள் மூலம் எளிமையாக சரிசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழிமுறை-1: தெரிந்தோ தெரியாமலோ உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும்.
வழிமுறை-2: அடுத்து தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.
வழிமுறை-3: அதன்பின்பு குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது.
வழிமுறை-4: ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
வழிமுறை-5:
சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
வழிமுறை 6:
அடுத்து ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
வழிமுறை-7:
ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். இரவு நேரமாக இருந்தால் மின்விளக்கு வெளிச்சத்தில் வைப்பது மிகவும் நல்லது.
வழிமுறை-8:
ஸ்மார்ட்போனின் மேல் சிறிது அரிசி போட்டுவைத்தால் சரியாகும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழிமுறை-9:
உங்கள் ஸ்மார்ட்போனை ஆன் செய்ய முடியாத நிலைமையில் நீங்கள் சர்வீஸ் சென்ட்டர் எடுத்து சென்று சரிசெய்வது மிகவும் நல்லது.
Post a Comment