தொடர்ந்து 15 நாள் நூடுல்ஸ் மட்டுமே சாப்பிட்டு வந்தா, உங்க உடம்பு என்ன ஆகும்?

2 மினிட்ஸ் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்... பசி வயிற்றை கிள்ளுகிறது என்றால், மூளை உடனே உரைக்கும் உணவு இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். அதன் விளம்பரம், ருசி நிச்சயம் அதைவிட்டு பிரிய செய்யாது. காதலியுடன் ப்ரேக்-அப் செய்வது கூட எளிதாகிவிடும். ஆனால், இந்த பிராயிலர் சிக்கன் மற்றும் நூடுல்ஸ் உடன் ப்ரேக்-அப் செய்வதெல்லாம் சிங்கிள்ஸ் வாழ்க்கையில் மிக மிக கடினம். வெளியூர்களில் தங்கி படித்து, வேலைக்கு போய் வரும் நபர்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பதே இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தான். அதுவே இல்லை என்றால், அவர்கள் எங்கே போவார்கள். ஆனால், தொடர்ந்து 15 நாட்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று, தன் சொந்த வாழ்வில் பெற்ற அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் ஒரு மாணவி.
15 நாட்கள்! நான் வெளியூரில் தங்கி கல்லூரி படித்து வரும் பெண். தனியாக வசித்து வருவதால், தினமும் உணவு சமைத்து உண்பது சற்றே கடினம். ஆயினும், நான் டயட்டில் மிகவும் கருத்துடனும், கவனத்துடனும் தான் இருக்கிறேன். ஆனால், தேர்வு காலங்களில் வேறு வழியின்றி நான் நூடுல்ஸ் சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். 10, 15 நாட்கள் தினமும் நூடல்ஸ் உண்ணும் போது உடல் ஆரோக்கியத்தில் மாற்றங்கள் தென்படுகிறது. இதை, சில காலம் கழித்து தான் கண்டறிந்தேன்.
உடல் எடை! எக்ஸாம் நாட்களில் நூடல்ஸ் தான் நான் டிக் செய்யும் உணவாக இருந்தது. சீக்கிரம் சமைத்து உண்ணவும், அதிகம் படிக்கவும் இது உதவும். 15 நாட்கள் தேர்வு நடக்கிறது எனில், ஒரு நாளுக்கு ஒரு முறையாவது நான் நூடுல்ஸ் சாப்பிட்டுவிடுவேன். நான் உன்னித்து கவனித்த போது தான் அறிந்தேன், இந்த பழக்கம் என் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது என்று.
சோடியம்! இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் இரண்டு முறை டீப் ஃப்ரை செய்கிறார்கள். இதில் சோடியத்தின் அளவு கூடுதலாக இருக்கிறது. இரண்டு முறை டீப் ஃப்ரை செய்வதனால், அதிகளவில் கொழுப்பு சச்த்து சேர்கிறது. மேலும், அதிகளவிலான சோடியம் சேர்ப்பு, நிறைய ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு காரணியாகிறது. இது உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
தினசரி வேண்டாம்! இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் இருக்கும் Redefined Flour இடுப்பு அளவு அதிகரிக்க செய்கிறது. இதனால், நிச்சயாமாக நீங்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தவிர்க்க வேண்டியது அவசியம். என்றாவது ஒரு நாள், அவசரம் என்றால் நூடுல்ஸ் சரியான தேர்வாக இருக்கலாம். ஆனால், தினசரி உணவில் நூடுல்ஸ் நிச்சயம் அபாயமாக தான் முடியும்.
Post a Comment