உங்களின் காதலி (அ) மனைவிக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீங்கள் இதைதான் முதலில் செய்ய வேண்டும்...!

இன்று பலருக்கும் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பொதுவாக நமது அன்பிற்குரிய காதலியோ அல்லது மனைவியோ உடல் சார்ந்தோ அல்லது உளவியல் சார்ந்தோ ஏதேனும் பிரச்சினைகளை கொண்டிருந்தால் அதை நாம் அணுகும் முறையிலே பாதி நோயை நாம் குணப்படுத்தி விடலாம்.
அன்பே அழியாத ஆயுதம்..!
பலருக்கு இது எதோ விளையாட்டாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அன்பை கொண்டு நோயிற்கான மருந்தை நம்மால் கொடுக்க முடியும் என்பதே உண்மை. உங்களின் அன்பிற்குரியவர்கள் மன உளைச்சலால் இருந்தால் மாத்திரைகளை விட உங்களின் அன்பு வார்த்தைகள் முதன்மையான வலிமை கொண்டது என மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
எது கொடியது..?
ஒரு சிலருக்கு உடல் அளவில் நோய்கள் இருக்க கூடும். வேறு சிலருக்கு உளவியல் ரீதியான பிரச்சினை அதிகமாக இருக்க கூடும். பொதுவாக உடல் அளவிலான பிரச்சினைகளை காட்டிலும் உளவியல் சார்ந்த கோளாறுகள் அதிக ஆற்றல் பெற்றது. உளவியல் கோளாறுகள் ஒருவரின் உயிரையே பறித்து விட கூடும்.
நம்பிக்கை கொடுங்கள்..!
உங்களின் காதலி மன உளைச்சலால் அவதிப்பட்டால் நீங்கள் முதன்முதலில் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது நம்பிக்கை தான். " எந்த சூழலிலும், எது நடந்தாலும் நான் உன் கூடவே இருந்து, உனக்கு மிக பெரிய உறுதுணையாக இருப்பேன்" என்ற நம்பிக்கை வார்த்தைகளை அடிக்கடி சொல்ல வேண்டும்.
எடுத்து சொல்லுங்கள்..!
உடல் வியாதியோ அல்லது மன வியாதியோ, எதுவாக இருந்தாலும் அதனை பற்றிய புரிதலை முதலில் அவர்களுக்கு கொடுங்கள். மருத்துவர் செய்யும் மருத்துவத்தை விட நீங்கள் அவர்களுக்கு இந்த பிரச்சினையை பற்றி தெளிவாக ஆறுதலுடன் எடுத்து சொல்ல வேண்டும். இது ஒரு சாதாரண நோய் தான், எளிதில் குணப்படுத்தி விடலாம் என்கிற நம்பிக்கையை அவர்களின் மனதில் விதைக்க வேண்டும்.
தவறாதீர்கள்..!
உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு கொடுக்கும் மாத்திரைகளை தவறாது கொடுத்து வாருங்கள். சரியான நேரத்தில் உணவை சாப்பிட சொல்லுங்கள். மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை மருத்துவரின் பரிசோதிக்க அழைத்து செல்லுங்கள். சீரான மருத்துவ முறை உங்கள் இணையை நிச்சயம் அந்த நோயின் பிடியில் இருந்து காப்பாற்றி விடும்.
வாக்கு வாதம் வேண்டாமே..! ஏற்கனவே பிரச்சினையில் உங்கள் அன்பிற்குரியவர்கள் இருக்கும் போது அவர்களுடன் வாக்கு வாதமோ, சண்டையோ போடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், இது மேலும் அவர்களுக்கு அதிக காயத்தையும், தவறான எண்ணத்தையும் உங்கள் மீது வரவழைத்து விடும்.
மனசு விட்டு பேச சொல்லுங்கள்..! எதுவாக இருந்தாலும் மனசு விட்டு உங்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச சொல்லுங்கள். "அது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன்" என்ற வார்த்தையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள். அவர்கள் நினைப்பது உங்களுக்கு புரிந்தால் மட்டுமே உங்களால் அடுத்த படியை எடுத்து வைக்க முடியும். இல்லையெனில் எது செய்தாலும் தவறாகவே செல்லும்.
பட்சாதாபம் வேண்டாமே..! நோயினால் அவதிப்படும் உங்களின் அன்பிற்குரியவர்கள் முன் யாரையும் பாவமாக பேசும் படி வைத்து கொள்ளாதீர்கள். நீங்களும் எப்போதும் பரிதாபம்' காட்டுவது போன்று நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே அவர்களுக்கு இப்போது தேவைப்படுகின்ற ஒன்றாகும்.
Post a Comment