ஜெயலலிதா வீடியோ அப்போலோவில் எடுக்கப்படவில்லை வெளிவந்த மர்ம தகவல்

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள சூழ்நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வீடியோ பற்றி பல சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

அந்த வீடியோவில் உள்ள அறையின் பக்கவாட்டில் மரங்கள் தெரிகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தது அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில். அங்கு அவ்வளவு உயரமான மரங்கள் கிடையாது.

ஆனால், அந்த மரங்கள் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கிறது. போயஸ்கார்டன் இல்லத்தில் முதலாம் மாடியில்தான் ஜெயலலிதாவின் அறை இருக்கிறது.

அதேபோல், அப்போலோ மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் அறையில் உள்ள அனைத்து பொருட்களிலும் அந்த மருத்துவமனையின் குறியீடு இருக்கும். ஆனால், வெளியாகியுள்ள வீடியோவில் அப்படி எதுவும் இல்லை.

எனவே, இந்த வீடியோ போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், போயஸ்கார்டனிலும் இதுபோன்ற சிகிச்சை செட்டப் இருப்பதாக கூறப்படுகிறது.

மக்களை முட்டாளாக்கி RK நகர் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக தினகரன் போட்டுள்ள திட்டம்தான் இது என்று அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments

Alisha Stylish Banarasi Silk

₹1600 Cash on Delivery Free Shipping