கண்மூடித்தனமான வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு ஆப்பு, வருகிறது

வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு ஆப்பு, வருகிறது Restricted Groups.!


ஒரு சக்தி வாய்ந்த ஊடக கருவியாக மாறிவிட்ட வாட்ஸ்ஆப்பின் பயனர்கள் - தனியார், சமூகம் மற்றும் தொழில்முறை என பல்வேறு வகையான வாட்ஸ்ஆப் க்ரூப்களில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் "வாட்ஸ்ஆப் க்ரூப்" ஆனது நேர்த்தியான முறையில் கையாளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளுக்கு இடையே வாட்ஸ் ஆப் க்ரூப்களில் சில கட்டுப்பாடு அம்சங்கள் உருட்டப்படவுள்ளன.
  வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின்களுக்கு அதிக கட்டுப்பாடு சக்திகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ்
 வாட்ஸ் ஆப் பயன்பாட்டின் பீட்டா கட்டமைப்பை அடிப்படையாக வெளிவரும் புதிய அம்சங்களை பற்றிய லீக்ஸ் தகவல்களை வெளியிடும் வலைத்தளமான வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, வாட்ஸ்ஆப்பில் 'ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ் ' என்கிற பெயரின் கீழ் புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.


குழுவை விட்டு நீக்காமலேயே..
 குறிப்பாக வாட்ஸ்ஆப் குழுவின் அம்சத்தை தவறாகப் புரிந்து கொண்ட உறுப்பினர்களை, குழுவை விட்டு நீக்காமலேயே அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு உரையாடல்களை அல்லது விவாதங்களை நிகழ்த்தும் திறனும் கூறப்படும் 'ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்' அம்சத்தில் இடம்பெறலாம்.


மிகவும் வரவேற்கத்தக்கது 
போலியான அல்லது தவறான செய்திகள், தீங்கிழைக்கும் அல்லது வெறுப்பு நிறைந்த செய்திகள் அல்லது வன்முறை மிக்க மற்றும் ஆபாச வீடியோக்களை மிகவும் வேகமான முறையில் பரப்ப வாட்ஸ்ஆப் க்ரூப் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடையே அறிமுகமாகவுள்ள இந்த கட்டுப்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை


No comments

Alisha Stylish Banarasi Silk

₹1600 Cash on Delivery Free Shipping