ஆதார் உடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிட்டதா ? சரி பார்ப்பது எப்படி

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் கண்டிப்பாக தேவைப்படுகிறது, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க சில வழிமுறைகள் உள்ளது.
வழிமுறை-1:
முதலில் UIDAI-என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
வழிமுறை-2:
அதன்பின்பு UIDAI--வலைதளத்தில் வலது பக்கத்தில் "Verify Email/Mobile Number" -என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.
வழிமுறை-3:
அடுத்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் எண், மொபைல் எண், மற்றும் பாதுகாப்பு குறியீடு போன்ற தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.
வழிமுறை-4:
பின்னர் உடனடி ஒருமுறை கடவுசொல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும், அதன்பின் உங்களுக்கு வந்த கடவுசொல்லை அந்தபக்கத்தில் உள்ளிடவும்.
வழிமுறை-5:
அதன்பின்பு மொபைல் எண் எங்கள் பதிவுகளுடன் பொருந்துகிறது என்ற தகவல் உங்களுக்கு கிடைக்கும்
Post a Comment