இப்படி தினமும் கட்டிப்பிச்சா நம்ம உடம்புக்குள்ள என்னென் நடக்கும் தெரியுமா? இப்ப தெரிஞ்சிக்கங்க...
கட்டிப்பிடிப்பது என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அது, "நான் உனக்காக இருக்கிறேன்", "நீ எனக்கு மிகவும் முக்கியம்", "நான் உன்னை பாதுகாப்பேன்", என்று மட்டுமில்லாமல் இன்னும் பலவற்றை உணர்த்தும். ஆனால் இதற்கான நன்மைகள் பல உள்ளன.
இந்த பதிவில், கட்டிப்பிடிப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு உண்டாகும் பல்வேறு நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். இதனை படித்து முயற்சித்தும் பாருங்கள்.
கட்டியணைத்தல் கட்டிப்பிடிப்பது, ஒருவரை மற்றவருடன் இணைக்கிறது, அந்த சூழலை சௌகரியப்படுத்துகிறது, நமது உணர்வை வெளிப்படுத்த அனுமதிக்கிறது, வானத்தில் பறப்பது போன்ற உணர்வைத் தருகிறது. மேலும் கட்டிப்பிடித்தலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
நன்மைகள் என்ன? நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது அல்லது மற்றவர் உங்களை கட்டிப்பிடிக்கும் போது ஆக்சிடோசின் என்ற சந்தோஷ ஹார்மோன் சுரக்கிறது. இது சமூக பிணைப்புடன் தொடர்புடையது, குறிப்பாக, தாய் மற்றும் குழந்தை இடையே உருவாகும் பிணைப்பு. மேலும் சில நன்மைகள் இதில் உள்ளன, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, மன அழுத்த அளவைக் குறைக்கிறது, மேலும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் சிறப்பான தீர்வுக்கு, இது உண்மையான அன்புடன் செய்ய வேண்டிய ஒரு செயல் ஆகும்.
உடல் ரீதியாக மேலும் சில நொடிகள் தொடர்ச்சியாக கட்டிப்பிடிக்க வேண்டும். நமக்கு மிகவும் அன்பானவர்களிடம் அடைக்கலம் புகுவது போன்ற அற்புதமான விஷயம் வேறு எதுவும் இல்லை. கட்டிப்பிடிப்பதால் உண்டாகும் உடல் ரீதியான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்போது காணலாம்.
உடலுக்கு ஆக்சிஜனை தருகிறது நீங்கள் ஒருவரைக் கட்டிப்பிடிக்கும்போது உங்கள் உடலில் ஹீமோக்ளோபின் அளவு ஊக்குவிக்கப்பட்டு, உடலின் முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தில் அதிக ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் உடலில் உடனடி உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது கட்டிப்பிடிப்பதால் மட்டுமல்ல, உங்களுக்கு நெருக்கமானவர்களின் கைகளைப் பற்றிக் கொள்வதால் கூட இந்த நன்மை உண்டாகிறது. இன்னொரு வழியில், உங்கள் இதய துடிப்பை மிதப்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதனால் உடல் மற்றும் மனம் அமைதி அடைகிறது, இதனால் இதய நோய் பாதிப்பிற்கான அபாயம் குறைகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு நாள் முழுக்க வெளியில் வேலை முடித்து களைப்பாகவும் மன அழுத்தத்துடனும் வீடு வந்தவுடன் உங்கள் குழந்தைகள் அல்லது துணை அல்லது செல்ல பிராணியிடம் இருந்து கிடைக்கும் ஒரு கட்டிப்பிடி வைத்தியம் போல் சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.
நோயெதிர்ப்பு மண்டலம் கட்டிப்பிடிப்பதில் உள்ள மற்றொரு நன்மை, உங்கள் வயது அதிகரிக்கும்போது உங்களுக்கு அது உதவுகிறது. நீங்கள் மற்றவரை கட்டிப்பிடிப்பதால் அல்லது மற்றவர் உங்களைக் கட்டிப்பிடிப்பதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைஅடைகிறது.
தூக்கமின்மை வீட்டின் வெளியில் பயங்கரமான புயல் அடிக்கும்போது, அல்லது உங்கள் மனதின் உள்ளே ஒரு பெரிய பிரச்சனையை சுமந்து கொண்டிருக்கும்போது, உங்களால் சரியாக தூங்க முடியாது. அந்த நேரம் ஒரு தூக்க மாத்திரையைப் போல் கட்டிப்பிடிப்பது உதவும்.
இயற்கையான மன அழுத்த எதிர்ப்பி தூங்க உதவுவது மற்றும் மன அழுத்தத்தைப் போக்குவது போன்றவற்றைப் போல் கட்டிப்பிடித்தல் என்பது ஒரு சிறந்த இயற்கை மன அழுத்த எதிர்ப்பியாகவும் விளங்குகிறது.
குறைவான கோபம் அதிக கோபத்தில் இருக்கும்போது கட்டிப்பிடிப்பதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு கோபம் குறைகிறது. இதனால் உங்கள் டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ் ஆக முடிகிறது.
உணர்வுகளை வெளிப்படுத்துவது உங்களுக்கு நெருக்கமானவர்களை கட்டிப்பிடிப்பதை விட சிறந்த பரிசு அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. ஆகவே இன்னும் அதிகமாக கட்டிக் கொள்ளுங்கள்.
Post a Comment