உங்கள் ராசிப்படி எந்த உறவு உங்கள் வாழ்வில் மிகமுக்கியமானது தெரியுமா?


நமது வாழ்க்கையில் உறவுகள் என்பது மிகவும் முக்கியமானது. உறவுகளின் முக்கியத்துவத்தை உணர வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. ஏனெனில் ஒரு சமயத்தில் உறவுகள் பிரச்சினைகளாக தோன்றினாலும், நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நிச்சயம் அவர்கள் துணைக்கு நிற்பார்கள். மாறிவரும் நமது சமூக சூழ்நிலையில் நம் அடுத்த தலைமுறை இழந்து வருவது உறவுகளை மட்டுமல்ல பல வாழ்க்கை பாடங்களையும்தான். எதிர்காலத்தில் அவர்கள் தனியாய் இருக்க வேண்டிய நிலையை நாமே உருவாக்கி கொண்டிருக்கிறோம்

ஜோதிடத்திலும் உறவுகள் முக்கியத்துவம் வகிக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அனைத்து உறவுகளும் முக்கியம்தான் ஆனால் சில உறவுகள் மீது மட்டும் நீங்கள் அதிக பாசம் வைத்திருப்பீர்கள் அல்லது அவர்கள் உங்கள் மீது அதீத பாசம் வைத்திருப்பார்கள். அப்படி உங்கள் வாழ்க்கையில் மிகமுக்கியமான உறவு என்ன என்பதை உங்கள் ராசி கூட தீர்மானிக்கும். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்கள் வாழ்வில் முக்கியமான உறவு யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம் உங்கள் ராசிப்படி உங்களுக்கு முக்கியமான உறவு எதுவெனில் தாத்தா பாட்டியுடனான உறவுதான். அவர்களின் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்க விரும்பினால் அவர்களுடன் நல்ல உறவை பேண வேண்டியது அவசியம். சிவபெருமானை வணங்குவது அவர்களுடனான உங்கள் உறவையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

ரிஷபம் நீங்கள் உங்கள் உடன்பிறப்புகளோடு நெருங்கிய, அன்பான உறவை பகிர்ந்துகொள்வீர்கள். வயதான காலத்தில் கூட உங்கள் உறவு அப்படியேதான் இருக்கும். உங்கள் உடன்பிறப்புகளுடனான உறவு சிக்கல்கள் உங்கள் எதிர்காலத்தில் பல பாதிப்புகளை உண்டாக்கும். நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவது நல்லது.

மிதுனம் மிதுன ராசியில் பிறந்தவர்கள் தங்கள் அண்டை வீட்டாரோடு நல்ல உறவை பேண வேண்டியது அவசியம், இல்லையெனில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கிருஷ்ணரை வணங்குவது உங்கள் பிரச்சினைகளை குறைக்கும்.

கடகம் அனைவருமே அவர்கள் பெற்றோருடன் நெருக்கமான உறவையும், அன்பையும் கொண்டிருப்போம் ஆனால் கடக ராசிக்காரர்கள் மற்ற அனைவரையும் விட அதிக அன்பு கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு எப்பொழுதுமே அவர்கள் பெற்றோர்களுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். பெற்றோருடன் உறவில் இல்லாதது அவர்களுக்கு உணர்ச்சிரீதியான மற்றும் மனரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் சிவபெருமானை வணங்குவது நல்லது.

சிம்மம் ஜோதிட அறிவியலின் படி சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நெருக்கமான உறவை பேணா வேண்டியது அவசியம். அவர்களுக்கு தங்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களை விட வாழ்க்கைத்துணையே நெருக்கமாவார்களாக இருப்பார்கள். அவர்களுடன் பிரச்சனையில் ஈடுபடுவது மோசமான மருத்துவ பிரச்சினைகளை உண்டாக்கும் . நீங்கள் விநாயகரை வணங்குவது உங்கள் உறவை மேலும் வலிமையாக்கும்

கன்னி உங்கள் நண்பர்களுடன் சீரான உறவை வளர்த்துக்கொள்வது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. முழுமையாக இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழ நீங்கள் உங்கள் நண்பர்களை சிறிது சார்ந்திருக்க வேண்டியது கட்டாயம். அது தவறும் பட்சத்தில் உங்களுக்கு பொருளாதாரரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம். நீங்கள் விஷ்ணுவை வணங்குவது நல்லது.

துலாம் நீங்கள் உங்கள் தாத்தா பாட்டியுடன் சிறந்த உறவை கொண்டிருப்பீர்கள். உண்மையில் உங்கள் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத்துணையை விட இவர்களே உங்கள் வாழ்க்கையின் மீது அதிக அக்கறையாக இருப்பார்கள். இந்த உறவில் சிக்கல் ஏற்படுவது உங்களுக்கு நஷ்டம் மற்றும் அவமானங்களை ஏற்படுத்தும். நீங்கள் சனிபகவானை வழிபடுவது நல்லது.

விருச்சிகம் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் நீங்கள் நண்பர்களுடனேயோ அல்லது வெளிஉறவுகளுடனோ நெருக்கமான உறவை வளர்க்க நினைக்கமாட்டிர்கள், அப்படி நினைத்தாலும் அதில் தோல்விதான் அடைவீர்கள் அதற்கு காரணம் நீங்கள் உங்கள் மனைவி அல்லது மகளுடன் அதிக பாசமிகு உறவில் மூழ்கியிருப்பதுதான். அதுதான் உங்கள் பலமும், பலவீனமும். இந்த உறவில் பிரச்சினை ஏற்படும்போது அது உங்கள் வாழ்வில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும். சனிக்கிழமைகளில் தானம் செய்வது உங்களுக்கு நல்ல பலனை வழங்கும். 



தனுசு நீங்கள் உங்கள் அப்பா அல்லது மகனுடன் நெருக்கமான உறவை பாதுகாத்து கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் இந்த் உறவில் விரிசல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் போராட்டங்கள் ஏற்படும். வாழைமரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது உங்களுக்கு நல்லதாகும்.

மகரம் நீங்கள் உங்கள் அம்மா வழி உறவுகளில் அதிக நெருக்கம் காட்டுவீர்கள். குறிப்பாக மாமா மற்றும் அத்தை மீது அதிக அன்புடன் இருப்பீர்கள்.உங்கள் உறவு அன்பு மற்றும் மரியாதையை பிரதிபலிக்கும். இந்த உறவில் பிரச்சினை ஏற்படுவது ஆரோக்கியரீதியான பல மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆஞ்சநேயரை வணங்கவேண்டியது உங்களுக்கு நல்ல பலனைத்தரும்.

கும்பம் உங்கள் வாழ்வில் உங்கள் நண்பர்கள் மிகமுக்கியமான பங்கு வகிக்கிறார்கள். உங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் மற்றவர்களை விட இவர்கள் சிறப்பாக கையாளுவார்கள். உங்கள் நண்பர்களுடன் மனம் திறந்து பேச நீங்கள் எப்போதும் தயங்கமாட்டிர்கள். இந்த பிணைப்பை நீங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும். இதில் ஏற்படும் பிரச்சினை உங்களுக்கு மனரீதியான பிரச்சினைகளை உண்டாக்கும். காயத்ரி மந்திரம் கூறுவது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

மீனம் இந்த ராசியில் உள்ளவர்கள் தங்கள் அப்பா மற்றும் மாமியாரிடம் அதிக அன்பு வைத்திருப்பார்கள். இவர்களுடனான பிரச்சினைகள் உங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களையும், குழப்பங்களையும் உண்டாக்கும். நீங்கள் வணங்க வேண்டியது கிருஷ்ணரை.

No comments

Alisha Stylish Banarasi Silk

₹1600 Cash on Delivery Free Shipping