சர்க்கரை சாப்பிட்ட உடன் நமது உடலில் ஏற்ப்படும் மாற்றங்கள் என்னென்ன .?

சர்க்கரை சாப்பிட்ட உடன் நமது உடலில் ஏற்ப்படும் மாற்றங்கள் என்னென்ன .? 

சுவைகள் ஆறு வகைப்படும். மற்ற சுவைகளை காட்டிலும் இனிப்பு சுவையே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக காலம் காலமாக வந்துள்ளது. அதிலும் இனிப்புகள் நிறைந்த உணவுகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதி பிரியம்.

சர்க்கரை சாப்பிடுவதால் பல அபாயங்கள் நமது உடலுக்கு ஏற்படும். ஆனால், அவற்றின் தாக்கம் உடனடியாக வெளிப்படாது. சர்க்கரை சாப்பிட்ட 1 மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்னென்ன என்பதை இனி அறிவோம்.

சுவையோ..சுவையோ..!

குலாப் ஜாமூன், லட்டு, ஜிலேப்பி போன்ற சுவைமிக்க இனிப்பு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுவோம். இவற்றை செய்து வைத்தாலே நமக்கு நாக்கில் எச்சி ஊறும். சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துமாம்.
அதிக சர்க்கரை..அதிக கொழுப்பு..! நாம் சர்க்கரையை சாப்பிடும் போது, நமது உடலில் கொழுப்புகள் அதிக அளவில் சேர தொடங்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் கொழுப்பின் அளவும் அதிகரிக்க கூடும். இதனால் தான், சர்க்கரை நோயாளிகளை இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில், இவை சர்க்கரையின் அளவை அதிகரித்து இதய நோய்களையும் உருவாக்கி விடும்.
செரிமான மண்டலம்... நாம் சர்க்கரை சாப்பிடும் போது, அவை வயிற்றுக்குள் சென்று செரிமான மண்டலாத்தை அடைந்து விடும். சிறுகுடலில் உள்ள நொதிகள் அவற்றை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தின் வழியாக மற்ற உறுப்புகளுக்கு அனுப்பி, இறுதியில் அவை ஆற்றலாக மாறி விடும்.
கணையம்- என்ன வேலை..? கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், இன்சுலின் அளவையும் தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கும். அதாவது, நீங்கள் அதிக அளவில் சர்க்கரை சாப்பிட்டால் அவை உடலின் முழு செயல்பாட்டையும் பாதிக்கும் என்பதை இவை உணர்த்துகிறது.

No comments

Alisha Stylish Banarasi Silk

₹1600 Cash on Delivery Free Shipping